ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்க ஒரு லட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசி தன்னை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்ததாக போலீசாரிடம் கைதான வீரேந்திர ராவத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நவீன முறையில் கொள்ளையடித்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழக சிறப்புப்படை போலீசார் ஹாரியானா விரைந்து கைது செய்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகளில் ஒருவரான வீரேந்தர் ராவத் என்பவரை 4 நாள் காவலில் எடுத்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஹரியானாவை சேர்ந்த அமீர் அர்ஷ், ஏடிஎம் கொள்ளையின் போது, இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்காக தன்னை ஒரு லட்சம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம் போட்டு அழைத்து வந்தார் என வீரேந்தர் ராவத் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.