அதர்வா பிறந்தநாள் – DNA படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் டிஎன்ஏ படத்தின் போஸ்டரை அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி,…

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிக்கும் டிஎன்ஏ படத்தின் போஸ்டரை அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா முரளி. பரதேசி, இமைக்கா நொடிகள், சண்டி வீரன், ஈட்டி போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகர் அதர்வா. கடந்த ஆண்டு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக இவரது நடிப்பில் மத்தகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

https://twitter.com/thinkmusicindia/status/1787818747270451319

இதனையடுத்து தற்போது இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் டிஎன்ஏ. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சித்தா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அதர்வா முரளியின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.