ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற தென்கொரியாவின் ஓ ஜின்னை இந்தியாவின் அதானு தாஸ் வீழ்த்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய அணி சார்பில் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில், தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
🇮🇳 Recurve archer @ArcherAtanu
wins against 3rd ranked Oh Jinhyek of South Korea in a 6-5 thriller to qualify for the next round.Stay tuned for more updates!#Archery #Olympics #Cheer4India pic.twitter.com/IUSbhc7Wb6
— SAI Media (@Media_SAI) July 29, 2021
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ், உலகின் 3ம் நிலை வீரரும், ஒலிம்பிக்கில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவருமான தென் கொரியாவின் ஓ ஜின் ஹைக்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6-5 என்ற கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்றார். இதன் மூலம், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அதானு தாஸ் முன்னேறியுள்ளார்
இதே போல், குத்துச்சண்டை 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஜமைக்காவின் ரிகார்டோ பிரவுனை எதிர்கொண்ட அவர் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆகஸ்டு 1ம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில், சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பகோதிரை எதிர்கொள்கிறார்.
.








