IPL ஏல வரலாற்றில் புதிய உச்சம்: 16.25 கோடிக்கு ஏலம் போனார் மோரிஸ்!

2021 ஐபில் போட்டிக்கான ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.…

2021 ஐபில் போட்டிக்கான ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கு முன்பு யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்ததே அதிக தொகையாகும். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி எடுத்திருப்பது ஐபிஎல் போட்டியின் மீது பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோரிஸை தொடர்ந்து கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு பெங்களூரூ அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னையை பொருத்த அளவில் இங்கிலாந்தின் ஆல் ரவுன்டரான மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.