ஆவடியில் போட்டியிட விரும்புகிறேன்: அமைச்சர் பாண்டியராஜன் விருப்பம்!

சட்டமன்றத் தேர்தலில் ஆவடித் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் தொழிற்துறை அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். தொழில் சட்ட…

சட்டமன்றத் தேர்தலில் ஆவடித் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் தொழிற்துறை அமைப்பின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டார். தொழில் சட்ட சீர்திருத்தம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் சிறு, குறு மற்றும் பெரு நிறுவனங்கள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். வணிகம் தொடர்பான 147 சட்டங்கள் 29 ஆக குறைக்கப்பட்டு, தற்போது 4 வகை பிரிவுக்குள் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா காலத்திலும் 76ஆயிரம் கோடிக்கு தமிழகம் முதலீடு பெற்றுள்ளது. இந்தியாவிலயே அதிக முதலீடு பெற்றுள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்ற அவர், சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க சிறப்பு திட்டம் வகுத்த முதல் மாநிலம் தமிழகம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 1.1 சதவிகிதம் மட்டுமே வேலையின்மை இருப்பதாகவும், இந்தியளவில் 7 சதவிகிதத்திற்கு மேல் வேலையின்மை இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய அவர்,
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் குறிப்பிட்டார். மேலும், சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து கையெடுத்து கும்பிட்டு உடனடியாக புறப்பட்டார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply