இந்திய மல்யுத்த வீராங்கனை கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாரீஸ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார். அதில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டிக்கு வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார்.
ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் காலையில் எடையிடும் போது, அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி அவர் துரதிர்ஷ்டவசமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஓய்வு அறிவித்த வினேஷ் போகத் தனது முடிவை திரும்பப் பெற்று இந்த ஆண்டு ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்க திட்ட மிட்டுள்ளார்.
ஆனால் புதிய தேர்வு கொள்கையின் படி ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க வினேஷ் போகத் தகுதியற்றவர் என்று தெரிவித்தது. இதனை எதிர்த்து வினேஷ் போகத் நீதிமன்றத்தை நாடினார்.
ஆசிய போட்டிக்கான தகுதிச் சுற்று தொடரில் பங்கேற்க வினேஷ் போகத்திற்கு உச்சநீதிமன்றம்அனுமதி அளித்தது. அதனடிப்படையில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தோல்வியடைந்துள்ளார். இப்போட்டியில் மீனாட்சி கோயத்தை எதிர்கொண்ட போகத் 4-6 என தோல்வியடைந்தார்.







