ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில் லாரி ஒன்று சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இந்த லாரியில் பாகிஸ்தானிலிருந்த ஆப்கானிய அகதிகள் அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 36 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 10 குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் அடங்குவர்.
மேலும் காயப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கிவிட்டதால் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.







