30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி : கோல்ஃப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்தியாவின் அதிதி அசோக்.!

ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் கோல்ஃப் போட்டியில் இந்தியா வீராங்கணை அதிதி அசோக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடத்த கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஆசிய விளையாட்டு போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 8ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் ஆசியாவை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. சுமார் 12 ஆயிரத்து 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஆக்கி, பேட்மிண்டன், , செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது நடைபெறும் ஆசிய போட்டியில் இந்தியா சார்பில் 655 வீரர் வீராங்கனை பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் கோல்ஃப் போட்டியில் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் கோல்ஃப் விளையாட்டில் இந்திய மகளிர் முதல் முறையாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் களம் கண்ட ஸ்ட்ரோக் முன்னிலையில் இந்த நாளைத் தொடங்கினார். எனினும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அர்பிசயா யூபோல் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading