ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதிக்குள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நுழைந்தது.
சீனாவில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி மலேசியாவை சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த மலேசியா, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்து.
முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனைகள் சபாலி வர்மா அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 67 ரன்கள், ஜெமிமா ரோட்ரிகஸ் 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசினர்.
174 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மலேசியா முதல் தனது முதல் ஓவரை எதிர்கொண்ட போது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டியானது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி Ranking அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
அதே போல மற்றொரு பிரிவில் உள்ள இந்தோனேசியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழையால் பாதித்தது. எனவே பாகிஸ்தான் அணியும் Ranking அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி ஒரு புறமும், மற்றொரு புறம் பாகிஸ்தான் அணியும் உள்ளனர். எனவே இறுதிப் போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதும் என பெரிதும் எதிர்பார்க்க படுகிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட் தொடரின் (2014) நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது







