ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று…

ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்  கொரியவை 3க்கு2 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய இந்திய அணி. அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய மலேசியா அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நான்காம் நாள் முடிவில் அணிகள் பெற்ற புள்ளிகளை பார்க்கலாம்.
இந்தியா, 4 போட்டிகளில் விளையாடி, 3 இல் வெற்றியும், ஒரு போட்டியை சமன் செய்து, 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  மலேசியா, 4 போட்டிகளில் விளையாடி, 3 இல்  வெற்றியும், ஒரு போட்டியில்  தோல்வியும் அடைந்து 9 புள்ளிகளுடன் இரண்டாவது  இடத்திலும், தென் கொரியா 4 போட்டிகளில்  விளையாடி, 1 இல் வெற்றியும், 2 போட்டியில் சமனம், ஒரு போட்டியில்  தோல்வியும் அடைந்து 5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஜப்பான் 2 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், சீனா  1 புள்ளியுடன் 6 ஆவது இடத்திலும் உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.