ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; புள்ளிப் பட்டியலில் மலேசியா முன்னிலை…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இரண்டாம் நாள் முடிவில் மலேசியா முன்னிலை; புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முதல் இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆசிய சாம்பியன்ஸ்…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இரண்டாம் நாள் முடிவில் மலேசியா
முன்னிலை; புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முதல் இடத்திலும்,
இந்தியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் நேற்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, ஜப்பான், மலேசியா, கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் என 6 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரானது நேற்று முதல் தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய தினம் இரண்டாவது நாளில் முதல் போட்டியில் கொரியா, பாகிஸ்தான்
அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. அதனை தொடர்ந்து
நடைபெற்ற போட்டியில் மலேசியா, சீனா அணிகள் மோதின. இதில் மலேசியா சீனாவை 5-1
என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா, ஜப்பானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

எனவே லீக் சுற்றுகளில் 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில்,
புள்ளிப் பட்டியலில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று மலேசியா முதல்
இடத்திலும், இரண்டாவது இடத்தில், ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில்
டிராவும் பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் ஒரு
போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்து கொரியாவும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் ஜப்பான், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா
ஒரு புள்ளியுடன் உள்ளனர். ஆறாவது இடத்தில் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை தழுவிய சீனா 0 புள்ளிகளுடன் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.