சென்னையில் அதிகாலையில் நடைபெற்ற கருணாநிதி மாரத்தான் போட்டியில், 70 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மாரத்தான் போட்டி அதிகாலையில் நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில், அமைச்சர் உதயநித ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், கே.என்.நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







