ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்; புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா அணி முன்னிலை…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முன்னிலையில் உள்ளது.  ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் நேற்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, ஜப்பான், மலேசியா,…

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் மலேசியா முன்னிலையில் உள்ளது. 

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் நேற்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, ஜப்பான், மலேசியா, கொரியா, சீனா மற்றும் பாகிஸ்தான் என 6 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரானது நேற்று முதல் தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று மலேசியா முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில், ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்து கொரியாவும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் ஜப்பான், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளனர். ஆறாவது இடத்தில் விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை தழுவிய சீனா 0 புள்ளிகளுடன் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.