நாளை தொடங்குகிறது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு…

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை தொடங்கவுள்ளது. இந்தியா முழுவதும் அரசு, தனியார்மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ…

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநில அரசின் கலந்தாய்வு இணையவழியில் நாளை தொடங்கவுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியார்மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி முதல் சுகாதாரத்துறை இணையதளங் களில் நடைபெற்று வருகிறது. பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்வது கடந்த3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடுசெய்வது நேற்றூ நிறைவடையஉள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி (இன்று) இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 7-ம் தேதி (நாளை) முதல் 11-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச் செல்வன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.