ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா ஜப்பான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சமனில் முடிந்தது.
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.. இதில் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா,ஜப்பான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்தியா, ஜப்பான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜப்பான் ஒரு கோல் அடித்தது. இரண்டாவது பாதியில் சுதாரித்து ஆடிய இந்திய வீரர்கள் 43வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தனர். இதனைத்தொடர்ந்து இந்தியா அணி கோல் அடிக்க போராடியதும் பலன் இல்லை.இறுதியில், 1-1 என போட்டி சமனில் முடிந்தது/
தென் கொரியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மலேசியா, சீனா அணிகள் மோதின. இதில் மலேசியா சீனாவை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.எனவே லீக் சுற்றுகளில் 6 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று மலேசியா முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில், ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிரா செய்து 4 புள்ளிகளுடன் இந்திய அணியும் உள்ளது.
மூன்றாவது இடத்தில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்து கொரியா உள்ளது. நான்காவது இடத்தில் ஜப்பான், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. விளையாடிய 2 போட்டிகளிலுமே தோல்வியை தழுவிய சீனா 0 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.






