ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது அரவிந்த் கெஜ்ரிவாலுடன் , பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்கும் உடன் இருந்தார்.







