ஆருத்ரா மோசடி வழக்கு | விசாரணைக்கு ஆஜரான ஆர்.கே.சுரேஷிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?

2 நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்,  ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் முன்பு இன்று ஆஜராகியுள்ளார்.  இன்று காலை 11 மணியளவில் நடிகர் ஆர்.கே.…

2 நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து சென்னை வந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்,  ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவலர்கள் முன்பு இன்று ஆஜராகியுள்ளார். 

இன்று காலை 11 மணியளவில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் அசோக் நகரில் உள்ள மாநில பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.  அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஏடிஎஸ்பி வேல்முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் கைதான ரூசோ,  நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் ரூ. 15 கோடி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.  அதனடிப்படையில் தற்போது ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில்,  ரூசோவுடனான தொடர்பு எப்படி ஏற்பட்டது? அவர் கொடுத்தது ஆருத்ரா மோசடி பணமா? இந்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரீஷ்ஷூடனான தொடர்பு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக,  விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஆர்.கே சுரேஷிடம் பத்திரிக்கையாளர்கள், இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தது ஏன் என கேட்கப்பட்டதற்கு,  “நான் தலைமறைவாகவில்லை. விசாரணைக்கு ஆஜராகி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.