நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம்: 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றம்

ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் ஏற்கனவே 2 முறை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் விண்ணில் ஏவ தயாராக இருந்தபோது 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969-ல்…

ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் ஏற்கனவே 2 முறை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் விண்ணில் ஏவ தயாராக இருந்தபோது 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969-ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு விண்வெளி ஆராய்ச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியை எடுத்துள்ளது. இதற்காக ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை உருவாக்கியுள்ளது.

 

இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, ‘ஓரியன்’ விண்கலத்தை சுமந்து செல்கிறது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் ஏவப்படுவதாக இருந்தது. ஆகஸ்ட் 29-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது முயற்சியாக நடவடிக்கை எடுத்தபோது, அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை மறுநாள் (27-ம்தேதி) ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாவும் அது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக ஆர்டெமிஸ் ராக்கெட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ள நிலையில், வானிலை சீராகும் நிலையில், வரும் அக்டோபர் 17-ம் தேதி இந்த ராக்கெட்டை மீண்டும் விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.