முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

டெபாசிட் தொகையை திருப்பித் தராமல் மோசடி-நிதி நிறுவன இயக்குநர் கைது

டெபாசிட் தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக வந்த புகாரை அடுத்து தி புரசைவாக்கம் தனவர்த்தன சாசுவத நிதி லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரப்பன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டார்களுக்கு, தரவேண்டிய பணத்தை திருப்பி செலுத்தாத காரணமாக, பாதிக்கப்பட்ட 74 பேர்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலிசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில், 9 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, அதன் நிர்வாக இயக்குநரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரூ.7.50 கோடி டெபாசிட் தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்ததற்காக புரசை தன்வர்த்தனா சாசுவத நிதி நிறுவனத்தின் இயக்குனர் ஈஸ்வரப்பனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புரசைவாக்கத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தனவர்த்தன சாசுவத நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டு முதிர்வடைந்த ரூ.7 கோடியே 50 லட்சம் தொகையை திருப்பித் தராமல் பல மாதங்களாக இழுத்தடித்து மோசடி செய்வதாக 75-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தனர்.

பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தினர். பின்னர் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர் இந்த மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஈஸ்வரப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு படங்கள்; கலக்கத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்

G SaravanaKumar

பல்லடத்தில் கல்குவாரியில் குதிக்கும் போராட்டம்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

EZHILARASAN D

இங்கிலாந்தில் குரங்கு அம்மை பாதிப்பு 1,076 ஆக உயர்வு

G SaravanaKumar