முக்கியச் செய்திகள் சினிமா

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஹிந்துஸ்தானி வே’

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஹிந்துஸ்தானி வே’ பாடல் வெளியானது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்று உருவாகியுள்ளது. இந்திய அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடலை இளம் பாடகி அனன்யா பாடியுள்ளார். அனன்யா, நிர்மிகா சிங், சிஷிர் சமந்த் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர்.

‘Hindustani Way’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை வெளியிட்ட தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனன்யா பிர்லாவின் இந்த முயற்சிக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். ஒலிம்பிக்கில் இந்தியாவிக்காக பதக்கம் வென்ற லியாண்டர் பெயஸ், மேரி கோம், விஜேந்தர் சிங், பிவி சிந்து, சாக்‌ஷி மாலிக், அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளில் வெற்றி நிகழ்வுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பா.ஜ.க.வின் பலம் கூடிவருகின்றது” – வானதி சீனிவாசன்

Web Editor

அவசர வழக்காக ராமர் பாலம் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Gayathri Venkatesan

ரசாயனத் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: 12 பேர் பலி

Halley Karthik