முக்கியச் செய்திகள் இந்தியா

தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு&காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜம்மு&காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால், இந்த உயிரிழப்புகள் குறித்து இன்னும் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலையும் ராணும் வெளியிடவில்லை.

சமீப நாட்களாக ஜம்மு&காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்ததாக தகவல்கள் வெளிவந்திருந்தன. ரஜோரி மாவட்டத்தின் பிர்-பஞ்சால் பகுதியில் சிலர் பதுங்கியிருந்ததாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 ஜவான்கள் மற்றும் ஒரு JCO (ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர்) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்திற்கு மேலும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்!

Ezhilarasan

உள்ளாட்சி தேர்தல் எப்போது? – ஆளுநர் உரையில் தகவல்!

Saravana Kumar

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ஓ.பன்னீர்செல்வம் நன்றி

Ezhilarasan