வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்த “அநீதி” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. இந்த படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
அநீதி படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி.பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 21-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
https://twitter.com/iam_arjundas/status/1679838316966064130
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் அர்ஜூன் தாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ட்ரைலர் வெளியான பிறகு தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.







