அரிக்கொம்பன் வருகையால் பிரபலமான முத்துகுழி வயல்

அரிக்கொம்பன் யானை வருகையால் பிரபலமான முத்து குழி வயல் பகுதியை இணையத்தில் அதிகம் பேர் தேடி  வருகின்றனர்.  கேரள தேயிலை தோட்ட பகுதிகளிலும்,சுற்றுலா தளங்களிலும் அரிக் கொம்பன் யானை, சுற்றி வந்தது. இதையடுத்து கடந்த மார்ச்…

அரிக்கொம்பன் யானை வருகையால் பிரபலமான முத்து குழி வயல் பகுதியை இணையத்தில் அதிகம் பேர் தேடி  வருகின்றனர். 
கேரள தேயிலை தோட்ட பகுதிகளிலும்,சுற்றுலா தளங்களிலும் அரிக் கொம்பன் யானை, சுற்றி வந்தது. இதையடுத்து கடந்த மார்ச் 29-ம் தேதி, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து,பெரியார் புலிகள் காப்பகம் முள்ளக்காடு பகுதிக்கு வனத்துறையினர் அரிக்கொம்பனை விரட்டினர்.
ஆனால் அங்கிருந்து விரட்டப்பட்ட அரிக்கொம்பன் யானை, தேனி மாவட்டம் மேகமலை ஹைவேஸ் பகுதியில் கடந்த மாதம் 16ம் தேதிவரை சுற்றித் திரிந்து, பின்னர் கம்பம் நகருக்குள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பின்னர் அரிக்கொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர் ,கன்னியாகுமரி மாவட்டம் அகத்திய யானைகள் காப்பாகத்திற்குட்பட்ட மேல் கோதையார் பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதனைத்தொடர்ந்து  அந்த யானை முத்து குழி வயல் என்ற பகுதியில்  விடப்பட்டது. 13 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்காணித்து வருகின்றனர். யானை முத்து குழி வயலில் விடப்பட்ட செய்தியை அறிந்த பலர், கூகுளில் அந்த இடம் எங்கு உள்ளது என்பதை தேடியுள்ளனர்.
மேல் கோதையாறு, குற்றியாறு,  மாஞ்சோலை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களையும் கூகுள் மேப்பில் பலர் தேடியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட வன பகுதியில் உள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 3500 முதல் 5000 அடி வரை உயரம் கொண்டது.  இதமான காலநிலை நிலவும் இந்த வனப்பகுதி அரிக்கொம்பன் யானை வருகையால் மீண்டும் பிரபலம் ஆகி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.