Google Maps-ன் அசத்தலான புதிய சேவை; என்ன தெரியுமா?

கூகுள் மேப்ஸின் புதிய வசதி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு கூகுள் மேப்ஸிற்கான புதிய ட்ராஃபிக் விட்ஜெட்டை, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகக் கூகுள் அறிவித்துள்ளது. இது அடுத்து வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும்…

கூகுள் மேப்ஸின் புதிய வசதி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

கூகுள் மேப்ஸிற்கான புதிய ட்ராஃபிக் விட்ஜெட்டை, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகக் கூகுள் அறிவித்துள்ளது. இது அடுத்து வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், இருப்பிடத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்திற்கான தகவல்களை அவர்களின் Android முகப்புத் திரையிலிருந்து பெற முடியும் எனச் சொல்லப்படுகிறது. அதாவது, Google வரைபடத்தில் அருகிலுள்ள ட்ராஃபிக் விட்ஜெட்டைத் தேர்வு செய்வதன் மூலம், பயனர்கள் உள்ளூர் ட்ராஃபிக் காட்சியைச் சரிபார்க்கலாம்.

இது தவிர, கூகுள் விட்ஜெட்டின் முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளது, அதன்படி, இது 2×2 அளவில் காண்பிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும், கூகுள் பகிர்ந்த முன்னோட்டத்தின்படி, அருகிலுள்ள ட்ராஃபிக் விட்ஜெட் வட்டமான சதுர வடிவில் தோன்றும். விட்ஜெட்டின் மையத்தில் நீல புள்ளியால் குறிக்கப்பட்ட தற்போதைய இருப்பிடத்தை முன்னிலைப்படுத்தும் வரைபடத்தை இது காட்டுகிறது. இருப்பினும், இந்த விட்ஜெட்டை மறு அளவிட முடியுமா இல்லையா என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. இது பயன்பாட்டிற்கு வந்தால் தான் நாம் அதனை உறுதி செய்ய முடியும்.

அண்மைச் செய்தி: ‘கூகுள் குரோமில் லைவ் கேப்ஷன் வைப்பது எப்படி?’

சமீபத்தில், கூகுள் மேப்ஸ் இப்போது உங்கள் பயணத்தில் சேர்க்கப்படும் டோல் விலைகளின் மதிப்பீட்டைக் காண்பிக்கும் என, . இந்த அம்சத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது, இருப்பினும், இது இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.