முக்கியச் செய்திகள் விளையாட்டு

காமன்வெல்த் போட்டி; இந்திய தடகள அணிக்கு 37 பேர் தேர்வு

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த்-2022 போட்டிக்கான இந்திய தடகள அணியில் நீரஜ் சோப்ரா உள்பட 37 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறுகிறது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த போட்டிக்கான இந்திய தடகள அணியை, தடகள சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா நேற்று அறிவித்தார். ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையிலான அணியில் 37 வீரர், வீராங்கனைகள் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

காமன்வெல்த் 2022க்கான தடகள அணி

ஆண்கள்: அவினாஷ் சேபிள் (3000மீ ஸ்டீபிள்சேஸ்), நிதேந்தர் ராவத் (மாரத்தான்), எம் ஸ்ரீசங்கர் மற்றும் முஹம்மது அனீஸ் யாஹியா (நீளம் தாண்டுதல்), அப்துல்லா அபூபக்கர், பிரவீன் சித்திரவேல் மற்றும் எல்தோஸ் பால் (டிரிபிள் ஜம்ப்); தஜிந்தர்பால் சிங் தூர் (ஷாட் புட்); நீரஜ் சோப்ரா, டிபி மனு மற்றும் ரோஹித் யாதவ் (ஈட்டி எறிதல்); சந்தீப் குமார் மற்றும் அமித் காத்ரி (ரேஸ் வாக்கிங்); அமோஜ் ஜேக்கப், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ், முஹம்மது அஜ்மல், நாகநாதன் பாண்டி மற்றும் ராஜேஷ் ரமேஷ் (4×400 மீ ரிலே) ஆகியோர் ஆண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

பெண்கள்: எஸ் தனலட்சுமி (100 மீ மற்றும் 4×100 மீ தொடர் ஓட்டம்); ஜோதி யர்ராஜி (100மீ தடைகள்); ஐஸ்வர்யா பி (நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல்) மற்றும் ஆன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்); மன்பிரீத் கவுர் (ஷாட் புட்); நவ்ஜீத் கவுர் தில்லான் மற்றும் சீமா அண்டில் புனியா (வட்டு எறிதல்); அன்னு ராணி மற்றும் ஷில்பா ராணி (ஈட்டி எறிதல்); மஞ்சு பாலா சிங் மற்றும் சரிதா ரோமித் சிங் (ஹேமர் த்ரோ); பாவனா ஜாட் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி (ரேஸ் வாக்கிங்); ஹிமா தாஸ், டூட்டி சந்த், ஸ்ரபானி நந்தா, எம்வி ஜில்னா மற்றும் என்எஸ் சிமி (4×100 மீ தொடர் ஓட்டம்) ஆகியோர் பெண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் ஆண்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஜ்ரங் புனியா, ரவி தஹியா ஆகியோருடன் மேலும் நான்கு மல்யுத்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடன்கள் வசூலிப்பில் கீழ்த்தரமாக நடந்தால் கடும் நடவடிக்கை- ஆர்பிஐ ஆளுநர்

Web Editor

மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்

EZHILARASAN D

ஈரோட்டில் எங்களுக்கு எதிரியே இல்லை, வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது – அமைச்சர் மனோ தங்கராஜ்

Web Editor