அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களா? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் ஹரி ஓம் என்கிற ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30க்கும்…

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் ஹரி ஓம் என்கிற ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. அவர்கள் அங்கு ஐஸ்கீரிம் பேக்கிங் பிரிவில் பணியாற்றியது தொடர்பான வீடியோ வெளியாகியது. ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 மாதங்களாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதிய வழங்கப்படவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட சிறார்கள், ஆவின் நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் ரமேஷ்குமார் தொலைபேசி வாயிலாக விசாரித்த போது, அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணி புரிவதாக சில ஊடகங்கள் கூறி தான் கேள்விப்பட்டேன். தகவல் வந்ததும் அதிகாரிகள் குழுவை அங்கு அனுப்பி ஆய்வு செய்தோம். அவர்கள் கூறுவது போன்று அதிக எண்ணிக்கையில் சிறார்கள் பணி புரிவதாக தெரிய வில்லை.

ஏற்கனவே ஒப்பந்ததாரர் சரியாக சம்பளம் வழங்கவில்லை. சம்பள குறைவு போன்ற பிரச்னை இருந்து வந்தன. இதை அதிகாரிகளுடன் பேசி இன்று நோட்டீஸ் வழங்கி விட்டு வந்தேன் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஆவினில் குழந்தை தொழிலாளர் பணியாற்ற வாய்ப்பு இல்லை எனவும், குழந்தை தொழிலாளர் பணியாற்றியது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.