உலகக் கோப்பை வில் வித்தை: 3 தங்கம் வென்றது இந்தியா!

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.  சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணிகள் மூன்று…

உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணிகள் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

ஜோதி சுரேகா,  அதிதி ஸ்வாமி,  பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி  இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.  அபிஷேக் வர்மா, பிரயன்ஷ்,  பிரதமேஷ் ஆகிய மூவரும் அடங்கிய ஆண்கள் அணி நெதர்லாந்தினை
238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.

காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா/ ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.  ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றன.  இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என எதிர்பாரக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.