ஏ.ஆர். ரகுமான் மகள் திருமணம்- குவியும் வாழ்த்து

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜாவுக்கு, ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுடன் திருமணம் நடைபெற்றது. ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கதீஜா, கீமா ரகுமானியா என்ற மகள்களும், அமின் என்ற மகனும் உள்ளனர்.  இதில்…

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜாவுக்கு, ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுடன் திருமணம் நடைபெற்றது.

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கதீஜா, கீமா ரகுமானியா என்ற மகள்களும், அமின் என்ற மகனும் உள்ளனர்.  இதில் அமீன் தற்போது இசைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா, ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ பாடலை பாடியிருந்தார். இது தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஃபரிஷ்தா’ என்ற ஆல்பம் பாடலையும் பாடியுள்ளார்.

பிரபல தொழிலதிபரும், ஆடியோ என்ஜினியருமான ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுடன் கதீஜாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்களை, ஏ.ஆர். ரகுமானும், கதீஜாவும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் மகளின் திருமண புகைப்படத்துடன்  வெளியிட்டுள்ள  பதிவில், புதுமணத் தம்பதிகளை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கதீஜா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், வாழ்வில் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நாள் இது என குறிப்பிட்டுள்ளார். தனக்கானவருடன் திருமணம் முடிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சமூக வலைதளத்தில் புதுமணத் தம்பதியருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.