பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளியை நியமிக்கப்பட்டுள்ளார்.  தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர்…

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக க.அறிவொளியை நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குநராக இருந்த முனைவர் ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராக இருந்த முனைவர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இருந்த முனைவர் பழனிச்சாமி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.