தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. அதன்படி அதன்படி அக். 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மதுராந்தகம், தாராபரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் – 2026 விருப்ப மனுக்கள் பெறுதல் : 8.9.2026 முதல் 10.9.2026 வரை (35) மதுராந்தகம் (தனி), (101) தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் இன்று (8.9.2026) முதல் 10.9.2026 வியாழக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10.9.2026 மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்“.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்:அது/




