பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே இருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலி வாக்காளர் அடையாள அட்டையை தடுக்கும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது. ஆனால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்போது தனிநபர் பாதுகாப்பு சமரசப்படுத்திக்கொள்ளப்படுமோ என்ற கேள்வியும் எழுகின்றன” என்றும்,
உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜி.எஸ்.டி வரியினால் பொருளாதாரம் வீக்கம் அடைந்துள்ளதாக விமர்சித்த அவர், அதனை ஈடுகட்டும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் செலுத்தக்கூடிய பெட்ரோல், டீசல் மீதான வரியினை உயர்த்தியுள்ளனர் என கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறினார்.








