தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்! – ஹீரோ யார் தெரியுமா?

ஹிந்தி திரையுலகில் பாராட்டு பெற்ற அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி சினிமாவில் இயக்குநர் அனுராக் காஷ்யப் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவரது படங்கள் பல்வேறு…

ஹிந்தி திரையுலகில் பாராட்டு பெற்ற அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிந்தி சினிமாவில் இயக்குநர் அனுராக் காஷ்யப் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள் : ‘கலைஞர் 100’ நிகழ்ச்சி ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’,  ‘ராமன் ராகவ்’ உள்ளிட்ட திரைப்படங்கள் பலரால் பாராட்டுக்களைப் பெற்றன.  இவர் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். மேலும், லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரது அடுத்த திரைப்படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.