36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்புக்கு எதிராக போராடிய இளம்பெண் மாஷா அமினியை ஈரான் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா உயிரிழந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தின் முதல் வெற்றியாக இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதையும், பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதை உறுதிபடுத்தவும் ‘அறநெறி போலீஸ்’ பிரிவை ஈரான் கலைத்துள்ளது.

அதேவேளை, கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டபவர்களை ஈரான் போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான மற்றும் கொடூரமான முறைகளை பின்பற்றி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாக மொஷென் ஷெகாரி என்ற நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது. ஹிஜாப் போராட்டம் தொடர்பாக தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் நபர் மொஷென் ஆவார்.

இந்நிலையில், ஹிஜாப் போராட்டத்தில் பங்கேற்ற 2-வது நபருக்கு ஈரான் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது. போராட்டத்தின் போது 2 ஈரான் பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு மஜித்ரிசா ரஹ்நவர்டு என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading