பெரு நாட்டில் தொடரும் அரசுக்கு எதிரான போராட்டம் – பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு

பெரு நாட்டில் தொடர்ந்து வரும் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.  மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிரான போரட்டத்தில் வன்முறை வெடித்து பெரும்…

பெரு நாட்டில் தொடர்ந்து வரும் அதிபருக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. 

மேற்கு தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிரான போரட்டத்தில் வன்முறை வெடித்து பெரும் கலவர பூமியாக மாறி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டார்.

இடதுசாரி கொள்கைகளை  கொண்டவரான பெட்ரோ காஸ்டிலோ கடந்த 2021ம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பெருவின் அதிபரானார். எதிர் கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இரண்டு முறை அவருக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். இரண்டு முறையும் தப்பித்த பெட்ரோ காஸ்டிலோவை மூன்றாவது முறை அதிரடியாக எதிர் கட்சியினர் தகுதி நீக்கம் செய்தனர்.

இதன் பின்னர் புதிய அதிபராக பொறுப்பேற்ற டினா பொலுவார்டே  கடந்த ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளை செய்ததாக பெட்ரோ காஸ்டிலோவை கைது செய்தார். இந்த கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வீதியில் வந்து போரடத் தொடங்கினர். இதற்கு எதிராக ஆளும் வலதுசாரி கட்சியின் அதிபரான டினா பொலுவார்டேவின் ஆதரவாளர்களும் போரட்டத்தில் குதித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வன்முறை வெடித்தது.

இதனையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும்  வீசினர். மேலும்  இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்தது. இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர்.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும்  நிலையில் இப்போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.