அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கையை’ ரஷ்யா தொடங்கிய நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை உக்ரைன் தொடங்கியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளாக உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வந்த ரஷ்யா, நேற்று (பிப்.24) அதிகாலை தனது போரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் ஆதரவு ரஷ்யாவுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளது.
இதன் முதல் கட்டமாக ரஷ்யாவின் ஃபெடரல் ஆன்டிமோனோபோலி சேவையை ‘Anonymous’ எனப்படும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வலைதளப்பக்கத்தை பல நாடுகளின் பயன்பாட்டர்களால் பயன்படுத்த இயலவில்லை.
இதனையடுத்து ரஷ்ய ஊடகமான RT முடக்கப்படுவதாக அறிவித்தது. மேலும் தாங்கள் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பகதாகவும் எனவே ரஷ்ய அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் ‘Anonymous‘ குழு அறிவித்தது.
இதனையடுத்து இந்திய நேரப்படி காலை 9.30 மணியளவில் RT-ன் வலைதளப்பக்கத்தை ஹேக்கர் குழு முடக்கியது. ஏறத்தாழ 30 நிமிடங்கள் இந்த வலைத்தளம் முடக்கப்பட்டிருந்தது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் RT மீட்கப்பட்டது.
https://twitter.com/YourAnonOne/status/1496965766435926039
முன்னதாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும், உக்ரைன் நேட்டோவில் இணைந்துள்ளதா இல்லையா என்பதை விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.










