முக்கியச் செய்திகள் தமிழகம்

லாரி மீது பைக் மோதி விபத்து: ஒருவர் பலி.

திருச்சுழி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி ஒருவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். அருப்புக்கோட்டையில் உள்ள அரவை ஆலையில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி முடிந்து, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குலசேகரநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேல்முருகன் மீது மோதியது. லாரியின் சக்கரங்கள் அவர் மீது ஏறி இறங்கியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து லாரியை சிறைபிடித்த வேல்முருகன் உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அருப்புக்கோட்டை – ராமேஸ்வரம் சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த திருச்சுழி போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Web Editor

முதல் நாளில் ரூ.15.73 கோடி வசூலை குவித்த ரன்பீர் கபூரின் ’து ஜூத்தி மே மக்கார்’

Web Editor

கொரோனா எதிரொலி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு!

Gayathri Venkatesan