முக்கியச் செய்திகள் விளையாட்டு

சென்னை அணியில் இணைய உள்ள வேகப்பந்து வீச்சாளர்!

சென்னை அணியில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இன்றைய போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான, ஜோஷ் ஹேசல்வுட், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதால், அதற்குத் தயாராகும் விதமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அவருக்கு மாற்று அணி வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேடிவந்தது. இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்பை, ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ விதிமுறைப்படி போட்டியில் பங்கேற்கும் வீரர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன விவகாரம் – இந்திய விஞ்ஞானி சிறையில் அடைப்பு!!

Jeni

இங்கிலாந்தின் புதிய அரசரானார் சார்லஸ்!

Web Editor

இந்தியா-தென்ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதம்

G SaravanaKumar