சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
தர்பார் படத்துக்கு பிறகு ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த. படத்தில், குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் தீபாவளி அன்று வெளியாகிறது. சிறுத்தை சிவாவுடன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரில் தொடக்கத்தில் விஷ்வாசம் படத்தில் இடம்பெற்றிருந்ததை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தில் குஷ்பூ, மீனா இருவரும் ரஜினியுடன் எந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ட்ரெய்லரில், குஷ்பூ மாமோய் என்றும், மீனா அத்தான் எனவும் யாரையோ அழைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், ரஜினி, நயன்தாராவுடன் இருப்பது போன்றும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதனால், படத்தில் குஷ்பூ, மீனா ஆகியோரின் கதாப்பாத்திரத்தை சரியாக யூகிக்க முடியாமல் உள்ளது.







