சென்னை, வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று(ஏப். 12) நடைபெற்ற கட்சி விழாவில், பாஜக மாநிலத் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகிய நயினார் நாகேந்திரனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, அவர் அதிகாரப்பூர்வமாக மாநிலத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது, அண்ணாமலையை காலணி அணியுமாறு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரனின் கோரிக்கைக்கு இணங்க, அண்ணாமலை காலணியை அணிந்து கொண்டார்.
முன்னதாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியப் போவதில்லை என சபதம் எடுத்த அண்ணாமலை, செய்தியாளர்கள் முன்னிலையிலேயே தனது காலணியை அகற்றினார். அப்போது காலம் முழுவதும் அண்ணாமலை காலணி அணிய முடியாது என திமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.








