பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுகவுடனான கூட்டணியை பற்றி முடிவு செய்யும் அதிகாரமில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திகுப்பம் பகுதியில் அதிமுக பிரமுகர் இல்ல நிகழ்வில் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மேலும் 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் பாராளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஒரே
நேரத்தில் நடத்திய முறை மாறியது. தற்போது பரிணாம வளர்ச்சி காலத்தின் கட்டாயத்தின் படி ஒரே நேரத்தில் இந்தியா முழுமைக்கும் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது நல்ல விஷயம் வரவேற்கத்தக்க விஷயமாக நாங்கள் பார்க்கிறோம். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்படும்.
1952-ல் 11 கோடி ரூபாய் பணம் தேர்தல் நடத்த செலவானது என்றும்தற்போது 60 ஆயிரம்
கோடிபணம் செலவாகிறது. அந்தப் பணத்தை பாலம் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
ஓ.பன்னீர்செல்வம் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஜெயக்குமார் கூறினார். அண்ணாமலைக்கு கூட்டணி பற்றி முடிவு செய்யும் அதிகாரம் இல்லை நாங்கள் மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம் தமிழகத்தில் எங்கள் தலைமையில் பாஜக கூட்டணியில் உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பயத்தில் பேசுகிறார். அவர் தேர்தலை சந்திக்க தைரியம் இருக்கிறதா. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ஏன் பயப்பட வேண்டும் மக்களுக்கு நல்லது செய்தவர்கள் தேர்தலை எதிர்கொள்ள ஏன் தயங்குகிறார்கள்
தேர்தல் காலத்தில் கொடுத்து வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை விலைவாசி உயர்வு
சொத்து வரி மின் கட்டணம் உயர்வு காவல் துறை உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு
இல்லை.
தமிழகத்தில் எங்கள் தலைமையில் பாஜக கூட்டணி உள்ளது. அண்ணாமலைக்கு கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை எங்கள் கூட்டணி தலைமைக்குதான் உள்ளது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.







