காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை!

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அரசியல் பயண மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்தார்.…

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அரசியல் பயண மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்துக்கு வருகை புரிந்தார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மாலை அணிவித்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, அண்ணாவின் நினைவு இல்லத்துக்குச் சென்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்குள்ள வருகைப் பதிவேட்டில் அண்ணாவின் தொண்டன் என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார், வைத்தியலிங்கம், ராயபுரம் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது பேரறிஞர் அண்ணாவின் தொண்டர்கள் எங்கு சென்றாலும் மழை பொழியும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.