ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம்!

பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை அண்ணா…

பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. மேலும் இதுவரை மூன்று முறை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி வந்தநிலையில், அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளில் 60 சதவீததிற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் மாற்றத்தை கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வில் பாடங்களில் இருந்து நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்ககூடிய வகையிலும், பாடங்களைப் புரிந்து பதிலளிக்கும் வகையில் விளக்க வகை கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய முறை தேர்வு இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தவிர்த்து மற்ற அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் நடத்தப்படும் என்றும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையில் வினாத்தாள் இருக்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.