”அண்ணா வெறும் பெயரல்ல; வரலாற்றின் பெருங்குரல்” – #KanimozhiMP!

பேரறிஞர் அண்ணாவின் 116 பிறந்தநாளையொட்டி, மக்களவை எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று…

பேரறிஞர் அண்ணாவின் 116 பிறந்தநாளையொட்டி, மக்களவை எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கனிமொழி எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் ; பண்பாட்டின் குறியீடு; உரிமைப்போரின் முன்னோடி; தமிழ்நாட்டின் அடையாளம் ; திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி, சுயமரியாதை, மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து, உரிமைப்போரை வென்றெடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.