அனிருத்தின் தாத்தா இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் காலமானார்

இளம் இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர் எஸ்.வி.ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தியவர். மக்கள்…

இளம் இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார்.

தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர் எஸ்.வி.ரமணன்.

ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தியவர். மக்கள் தொடர்பு கலையின் மாண்பாளர் என்று அழைக்கப்படுவர் எஸ்.வி.ரமணன். ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்துவந்த இவர், இன்று காலை வயதுமூப்பு காரணமாக காலமானார்.

இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். ரமணனின் தந்தை கே.சுப்பிரமணியமும் புகழ்பெற்ற இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். ரமண மகரிஷி, ஷீரடி சாய் பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றிய ஆவணப்படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இவர் செய்த சாதனைகளுக்காக மக்கள் தொடர்பு கலையில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக நடிகர் ரஜினிகாந்தை நேர்காணல் செய்துள்ளார்.

இவர், நமது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்காக பேசும் தலைமை நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் லிங்க்:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.