அரசு பேருந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் அருகே…

ஆந்திர மாநிலத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் அருகே 35 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, ஆறறுப்பாலத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிரே லாரி வந்ததால், பேருந்தை நிறுத்த ஒட்டுநர் முயற்சி செய்துள்ளார். எனினும், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது. இதனையடுத்து உள்ளூர் மக்கள், துரிதமாக செயல்பட்டு பேருந்திலிருந்த பயணிகளை படகுகள் மூலம் மீட்டனர்.

இருப்பினும் 5 பெண்கள் உட்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல்தேவ் சர்மா தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த  22 பேர் ஜங்காரெட்டிகுடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.