முக்கியச் செய்திகள் இந்தியா

சாலையில் சாகசம் செய்த இளைஞர்; வலைவீசி தேடும் காவல்துறை

ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபடி, துப்பாக்கியால் சுட்டு இளைஞர்கள் சாகசம் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் எதிரே உள்ள மேம்பாலத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது இந்த செயலால் தாங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் போக்குவரத்து துறையினருக்கு புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் இருவர் மேம்பாலத்தில் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டே அதன் மேலே ஏறி நின்று துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது போன்று காட்சிகள் படமாக்கியுள்ளனர்.  இந்தக்காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்

Gayathri Venkatesan

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

Jeba Arul Robinson

பொன்னு கொடுப்பதும், ஓட்டு போடுவதும் ஒன்று தான் சரியாக வாக்களியுங்கள் : ஈஸ்வரன்!

Saravana Kumar