மீண்டும் இணையத்தில் வைரலான வீடியோவால் ஈர்க்கப்பட ஆனந்த் மகிந்திரா!

இணையத்தில் வைரலன ஜன்னல் வடிவமைக்கும் வீடியோவை  ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா  தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தனது ட்விட்டர்…

இணையத்தில் வைரலன ஜன்னல் வடிவமைக்கும் வீடியோவை  ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

பிரபல தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா  தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேலான Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர்.

 

இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் நம்மால் காண முடியும். அத்துடன் எளிய மனிதர்களின் திறமைகளை, கண்டுபிடிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவிப்பார். மேலும், அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.

அந்த வகையில், அவரது சமீபத்திய பகிர்வில் அவர் ஒரு பால்கனி வடிவமைப்பைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில், “கட்டடத் தொழில் அரிதாகவே புதுமைக்கான அமைப்பாகும். இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும் புதிய வாழ்க்கை முறைகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது. கட்டடங்களைத் திட்டமிடும்போது நீங்கள் கருத்தில் கொள்ள இன்னும் ஒரு யோசனை,” என்று அவர் ட்விட்டரில் பால்கனி வடிவமைப்பைக் காட்டும் வீடியோவை மறுபகிர்வு செய்தபோது எழுதியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.