தமிழக உள்துறை (சிறப்புப் பிரிவு) சார்பில் 12.11.2026 தேதியிட்டு வெளியிடப்பட்ட காவல் குறிப்பு எண் SC/48/2026-ன்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நஜ்முல் ஹோடா ஐபிஎஸ்: சென்னையில் செயல்பாட்டுப் பிரிவு (Operations) கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பணியாற்றி வரும் நஜ்முல் ஹோடா ஐபிஎஸ், தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஏற்கெனவே காலியாக உள்ள பணியிடத்தில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் ஆர். தினகரன் ஐபிஎஸ்: சென்னையில் ஆயுதப்படை (Armed Police) கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பணியாற்றி வரும் டாக்டர் ஆர். தினகரன் ஐபிஎஸ், செயல்பாட்டுப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் பொறுப்பை முழுக் கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்வார். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தப் பொறுப்பை அவர் கவனிப்பார்.
இந்தப் பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசின் முதன்மைச் செயலாளர் ஏ. கார்த்திக் தெரிவித்துள்ளார்.




