தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று ஊர் திரும்பிய தமிழ்நாடு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய விளையாட்டுத்துறை சார்பில் யூத் கேம் ஃபெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பல்வேறு மாநில மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 200 பேர் கலந்து கொண்ட நிலையில், 93 பேர் தங்கமும், 24 பேர் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
இந்நிலையில், 20 தங்கமும், 10 வெள்ளி பதக்கமும் வென்று சொந்த ஊர் திரும்பிய வடசென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறுகிய கால பயிற்சியால் தங்களால் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது என மாணவர்கள் தெரிவித்தனர்.
வருங்காலங்களில் இதுபோன்ற சிலம்ப போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், அனைத்து அரசு பள்ளிகளிலும் சிலம்பத்தை கட்டாய பயிற்சியாக்க வேண்டும் எனவும் பயிற்சியாளர் கோரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







