தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளதால், ஆவினுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 9,360 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, நாட்டின் மிகப் பெரிய கூட்டுறவு அமைப்பான குஜராத்தின், ‘அமுல்’ நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொள்முதல் செய்யப்பட்ட பாலை பெங்களூருவில் விநியோகிக்கவும், பால் கொள்முதல் அதிகரிக்கும் போது தமிழ்நாட்டில் விநியோகிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லிட்டருக்கு 2 ரூபாய் அதிகம் வழங்கப்படும் என்றும், உடனடியாக கொள்முதல் தொகை வழங்கப்படும் என்றும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனால் பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், ஆவின் கொள்முதல் தொகையை இழுத்தடிக்காமல் உடனடியாக வழங்கினால், உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திடம் செல்லமாட்டார்கள் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா